பொடியனுர் பள்ளியில் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
1 min read
Birthday party of M.K. Stalin at Bodianur School
13.3.2024
தென்காசி மாவட்டம்
ஆவுடையானூர் ஊராட்சி பொடியனுர் அருணாசலனார் தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொசிவ பத்மநாதன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
திமுக மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் நாவல் குளம் கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நோட்டு புத்தகம் பென்சில் எழுது பொருட்கள் மற்றும் 50 சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊர் நிர்வாகி தங்கப்பழம் தலைமை வகித்தார். ராமசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணி யன் வரவேற்புரை ஆற்றினார். இந்த
நிகழ்ச்சியில் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறி ஞர் பொ.சிவபத்மநாதன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பா ஒன்றிய பெருந்தலைவர் க.காவேரி சீனித்துரை ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ் குமார் துணைத் தலைவர் சக்தி குமார் மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் செல்வம் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன் மாவட்ட ஓட்டுனர் அணி மேசியா பொறியாளர் அணி கபில்தேவதாஸ் மாவட்ட பிரதிநிதி வளர்மதி ராஜன் கிளைக் கழகச் செயலாளர் சிவன் பாண்டியன் அருள் தங்கம் புதூர் தங்கராஜ் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் ஒன்றிய பிரதிநிதி நியூட்டன் முருகன் கருப்பசாமி ராமசாமி கதிரேசன் வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் ரூபன் செந்தூர் முருகன் தங்கப்பழம் பாண்டியன் தங்கபாண்டியன் மகாராஜன் காசி பாண்டியன் பால்ராஜ் ஆவுடைசெல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா சாவித்திரி தங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.