தென்காசி தொகுதியில் பா.ஜ.க.,கூட்டணியில் ஜான்பாண்டியன் வேட்பு மனு தாக்கல்
1 min read
In Tenkasi Constituency, BJP has filed a nomination for Jan Pandian in coalition
26.3.2024
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.,கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.,சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ஜான் பாண்டியன் பா.ஜ.க., கூட்டணி கட்சியினருடன் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கமல் கிஷோரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவர் தாமரை சின்னத்தில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கலின் போது தென்காசி மாவட்ட பா.ஜ.க.,தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா, அமமுக மற்றும் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பா.ஜ.க.,கூட்டணி கட்சியினர்; கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவரான ஜான்பாண்டியன் (வயது 69) எம்.ஏ.,வரை படித்துள்ளார். இவரது மனைவி வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன். இவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக இருக்கிறார். இவர்களுக்கு டாக்டர் வியங்கோ பாண்டியன் என்ற மகனும், டாக்டர் நிவேரின் நிவேதா என்ற மகளும் உள்ளனர். தற்போது ஜான்பாண்டியன் பாளையங்கோட்டை எம்.கே.பி.நகர் அண்ணா வடக்குத் தெருவில் வசித்து வருகிறார்.