June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் கனிமொழி எம்பி தீவிர பிரச்சாரம்

1 min read

Kanimozhi MP is actively campaigning in Tenkasi

3.4.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு ஆதரவாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று இரவு தென்காசி ரத வீதிகளில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சிகள் திறந்த ஜீப்பில் நின்றவாறு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் அப்போது அவர் பேசியதாவது:-
.
இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் சிலிண்டரின் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் தருவதாக கூறி ஆட்சியைப் பிடித்த மோடி இதுவரை அதனை வழங்கவில்லை .ஆனால் அதற்குப் பதிலாக சாமானிய மக்கள் வங்கிக் கணக்கில் உள்ள சிறிய தொகைகளும் வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வய்ப்பை உருவாக்கி தருவோம் என்று சொன்னார்கள் இது வரையில் ஒருவருக்கு கூட வேலை வாய்ப்பை கொடுக்கவில்லை.
அனைத்து வகையிலும் தமிழகத்தை புறக்கணித்து வரும் பாஜக அரசையும் மோடியையும் தமிழ நாட்டு மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தால் இந்த வங்கிகளின் மறைமுக கட்டணம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது, மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் மூடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா கூட்டணி சார்பில் நல்லாட்சி மலர்ந்திட உங்களது மேலான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் என்.வெங்கடேஸ்வரன், தென்காசி நகர திமுக செயலாளர் ஆர். சாதிர், செங்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி தலைமை பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை எஸ் எம் ரஹீம், திமுக ஒன்றிய செயலாளர்கள் வல்லம் எம்.திவான்ஒலி, ஆர்.எம்.அழகு சுந்தரம் செங்கோட்டை ஆ.ரவிசங்கர்
கீழப்பாவூர் க.சீனித்துரை பேரூர் கழக செயலாளர் சுந்தரபாண்டியபுரம் வே.பண்டாரம், இலஞ்சி முத்தையா மேலகரம்
சுடலை குற்றாலம் குட்டி என்ற சங்கர் பண்பொழி
ராஜராஜன்

நகர்மன்றதுணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குற்றாலம் டி.ஆர்.கிருஷ்ணராஜா மாவட்ட தொண்டர் அணி இசக்கி பாண்டியன்,மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், மாவட்ட தொழிலாளர் அணி மாரிமுத்து பாண்டியன், சிறுபான்மை பிரிவு அணி இஞ்சி இஸ்மாயில்,
தகவல் தொழில் நுட்ப அணி முகமது ரபி சுப்பிரமணியன் மாவட்ட மருத்துவர் அணி மாரிமுத்து முன்னாள் ஒன்றிய செயலாளர் குற்றாலம் பா.ராமையா மற்றும் திமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *