கடையம் ஒன்றிய பகுதியில் நடிகர் வாகை சந்திரசேகர் தீவிர பிரசாரம்
1 min read
Actor Vagai Chandrasekhar is actively campaigning in the Kadayam union area
3.4.2024
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாகை சந்திரசேகர் தீவிர பிரசாரம்மேற்கொண்டார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கடையம் தெற்கு ஒன்றிய பகுதியில் வாகை சந்திரசேகர் தீவிர பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சிக்கு கடையம் ஒன்றிய திமுக செயலாளர் ஜெயகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ. பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், மதிமுக ஒன்றிய செயலாளர் சுந்தரம், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவம், ஒன்றிய அவைத்தலைவர் பக்கீர் மைதீன்,காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் சலீம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒன்றிய செயலாளர் மீரான், சிபிஐ ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன்,சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் இசக்கி முத்து, பேரூர் செயலாளர் அழகேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் காதர், மாவட்ட பிரதிநிதி முகமது யாகூப், பெருமாள், துணைச் செயலாளர் வின்சென்ட், பொருளாளர் சுடலைமுத்து, துணைசெயலாளர்கள் பக்கீர் மைதீன், கோதர் மைதீன், மாரியப்பன், முருகன்,ஜெபஸ்திராஜன், பாரி மீரா சாகிப், முகமது இப்ராகிம், சுப்பையா, மாரியப்பன், அண்ணாதுரை சசிகுமார், காவல்துறை பணி சுரேஷ், மோகன், மகேஷ் பாண்டியன், கண்ணாடி மாரியப்பன் மற்றும் பெண்கள் உள்பட பல 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.