May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை-மக்கள் மகிழ்ச்சி

1 min read

In many districts of Tamil Nadu Widespread rain-people rejoice

12.4.2024
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று பரவலாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் இந்தியப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது,
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. குற்றாலம் மெயின் அருவியில் நேற்று முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில்எனினும் உப்பளங்களில் மழை நீர் தேங்குவதால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலையில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ – மாணவிகள், வேலைக்குச் செல்வோர், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் கடும் சிரமத்துக்குள்ளாகினா். பரவலாக பெய்த மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பமும் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதேபோல் கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்துது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை (13.04.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.04.2024 மற்றும் 18.04.2024 ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.