15 சீட், ரூ.1000 கோடி, முதல்வர் பதவி என பேரம் பேசினார்கள்- சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு
1 min read15 seats, Rs 1000 crore, they negotiated for the post of chief minister – Seeman allegation
12.4.2024-
”15 சீட், ஆயிரம் கோடி ரூபாய், 2026ல் நீ தான் முதல்வர் எனக் கூப்பிட்டார்கள்” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பாக குற்றம்சாட்டியுள்ளார்.நாமக்கலில் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசியதாவது:-
மக்கள் மீதான அக்கறையில்தான், அன்பால்தான் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்கிறோம். 15 ஆண்டுகளாக களத்தில் போராடும் எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்? கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி., என எதையும் நீங்கள் (மக்கள்) கொடுக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் கொடுக்கிறேன் என என்னை கூட்டணிக்கு அழைத்தார்கள்.15 சீட், 2026ல் நீங்கள்தான் முதல்வர், 1,000 கோடி ரூபாய் என சொல்லிக் கூப்பிட்டார்கள். குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்றார்கள். தெருக்கோடியில்கூட நிற்பேன். ஆனால் உங்களோடு வரமாட்டேன் என மறுத்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால், எந்த கட்சி இவரிடம் பேரம் பேசியது என்ற தகவலை அவர் கூறவில்லை.