May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை -தென்காசி எஸ்.பி.சுரேஷ்குமார் தகவல்

1 min read
Seithi Saral featured Image

Election Security Precautions – Tenkasi S.P. Sureshkumar Information

18.4.2024
தென்காசி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி. சுரேஷ் குமார் கூறியிருப்பதாவது:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, வருகின்ற 19.04.2024-ம் தேதி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வரம்பிற்குட்பட்டதாகும். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வரம்பிற்குட்பட்டதாகும். தென்காசி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தம் 726 வாக்குச்சாவடிகளிலுள்ள 1419 வாக்குப்பதிவு மையங்கள் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் வரம்பிற்குள் உள்ளது.

தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியின் வரம்பிற்குள் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களை யும் மாவட்ட நிர்வாகத்துடன் காவல்துறை இணைந்து ஆய்வு செய்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் முழுவதிலும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த காவலர்களும், வனத்துறையினரும், ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினரும். ஓய்வு பெற்ற காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும், வெளிமாநில காவல் துறையினர் சேர்த்து மொத்தமாக 2503 க்கும் மேற்பட்டோர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தென்காசி மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 726 வாக்குச்சாவடி மையங்களிலிருந்து சுமார் 88 வாக்குச்சாவடிகளில் உள்ள 89 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக மாவட்ட நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச் சாவடிகளின் பதற்றத்தின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த வாக்குச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பிரச்சினைக் குறியவர்கள் மற்றும் ரௌடிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு மாவட்டம் முழுவதும் 858 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் 11 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி பதற்மான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து கூடுதலாக தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொருட்டு மூன்று மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் 1 தமிழ்நாடு சிறப்புக்காவல் படையினர் என மொத்தம் 296 காவலர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் உட்பட 73 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

மேலும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், 200 மீட்டர் கோட்டிற்கு அருகே இரண்டு சேர் மற்றும் டேபிள் அமைத்துக்கொள்ளலாம். வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் பகுதியில் யாரும் வாக்கு சேகரிக்க கூடாது. வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் தேர்தல் பணியளார்களைத் தவிர யாரும் வாக்குச்சாவடி அருகே கூடக் கூடாது. வேட்பாளர்கள் முதன்மை முகவர்கள் மட்டும் வாக்குச்சாவடி வரை செல்லலாம்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு Б/161/7601
19.04.2024-ம் தேதி அன்று, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார்
தலைமையில் 3 கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள்,
காவல் துணைக் கண்காணிப் பாளர்கள். 36 காவல் ஆய்வாளர்கள், 261 உதவி ஆய்வாளர்கள்/ சிறப்பு உதவி ஆய்வாளர்கள்/ பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புப்படைகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் தொடர்பான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் அசம்பாவித நிகழ்வுகளை தடுத்திடும் பொருட்டு 5 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15 இடங்களில் நிலையான அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்புகளும் மேலும், பதற்றமான வாக்குச்சாவடி களாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவு நாளன்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்புப்படைகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து வாக்குப்பதிவு நடந்து முடிந்து வாக்குப்பெட்டிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு மையங்களிலிருந்து எடுத்துச்செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு நாளன்று பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பிரச்சினை செய்பவர்கள், வன்முறையில் ஈடுபடுபவர்கள், தேர்தல் விதிமுறையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று ஏற்படும் இடையூறுகள் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண் 8300650710 மற்றும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலக அலைபேசி எண் 9489003324-க்கு தகவல் தெரிவிக்கலாம் 61601 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.
சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.