May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

பறவை காய்ச்சல் எதிரொலி -புளியரை சோதனைசாவடியில் கலெக்டர் ஆய்வு

1 min read

Avian influenza echo-collector survey at Puliarai check post

24.4.2024
கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதன் எதிரொலியாக புளியரை சோதனைச் சாவடியில் நடைபெற்று வரும் பறவை காய்ச்சல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு கோழிகள், வாத்துகள் பண்ணைகளில் கொத்து கொத்தாக இறந்து வருகின்றன. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புளியரை சோதனைச் சாவடி அருகே கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி பறவைகள் வாத்துகள் முட்டை கோழி தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்

இந்நிலையில் புளியரை சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்
ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரிச்சர்டு ராஜ், தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மகேஸ்வரி, செங்கோட்டை கால்நடை மருத்துவர் தங்கராஜ், புளியரை கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா, இடைகால் கால்நடை உதவி மருத்துவர் அருண்பாண்டியன், ஆகியோர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.