May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

ஓடும் பஸ்சில் பணம் திருடிய 2 பெண்கள் கைது; கடையம் போலீஸ் நடவடிக்கை

1 min read

2 women who complained to the Kadayam police were arrested in the case of theft

26/4/2024
தென்காசி அருகே பஸ்ஸில் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களது தங்கை போலீசார் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் தெரிவித்தது அம்பலமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த பால்தாய் என்பவர் கடந்த 12.04.2024 அன்று பகல் 11 மணிக்கு சேர்ந்தமரத்திலிருந்து கடையம் அருகே உள்ள மயிலப்புரம் கிராமத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது சுரண்டையில் இருந்து அந்த பேருந்தில் ஏறிய இரண்டு பெண்கள் பால்தாய் அமர்ந்திருந்த சீட்டில் ஒரு பெண்ணும், அவருடைய பின் சீட்டில் மற்றொரு பெண்ணும் அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில் பால்தாய் மயிலப்புரம் வந்ததும் பஸ்சை விட்டு கீழே இறங்கி அவரது கைப்பையை பார்த்தபோது அதிலிருந்த மணிபர்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக தனது மகனுக்கு தகவல் தெரிவித்து அவரை அழைத்துக்கொண்டு தனது மகனுடன் அந்த பஸ்சை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த பஸ் நiரையப்பபுரம் பகுதியில் சென்றது. உடனே அந்த பஸ்சை வழிமறித்து பேருந்து நடத்தினரின் உதவியுடன் சோதனை செய்த போது தனது அருகில் சீட்டில் இருந்த பெண்கள் பணத்தை எடுத்துவிட்டு மணி பர்சை மட்டும் கீழே கிடந்ததாக கொடுத்துள்ளனர்.

இது பற்றி பால்தாய் கடையும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பங்களா சுரண்டையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மனைவிகள் அஞ்சலி (வயது 26) மற்றும் பவானி ( 28 ) ஆகியோர் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு தென்காசி செல்வதாக கூறியுள்ளனர்.

தென்காசி செல்ல சுரண்டையிலிருந்து ஏன் கடையம் பேருந்தில் வந்தீர்கள் என்று கேட்டபோது காவல்துறையனரிடம் உரிய பதில் கூற முடியாமல் திணறி உள்ளனர். மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் அனைத்து கேள்விகளுக்கும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதோடு ஒரு கட்டத்தில் பால்தாயின் மணிப்பர்ஸில் இருந்த பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.

மேலும் விசாரணையில் மேற்படி நபர்கள் இரண்டு பெண்கள் மீதும் திருநெல்வேலி அருகே உள்ள முன்னீர்பள்ளம் காவல்நிலையம் மற்றும் கேரள மாநிலத்தில் பத்தணம்திட்டா, திருவல்லா, சவரா, கருநாகப்பள்ளி வடக்கன்சேரி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பபதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஓடும் பஸ்சில் திருட்டில் ஈடுபட்ட அஞ்சலி (வயது 26) மற்றும் பவானி (வயது 28) ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டு சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அஞ்சலி மற்றும் பவானி ஆகியோரின் தங்கை சுரண்டையை சேர்ந்த சிம்மி என்ற பெண் மேற்படி இருவரும் பொய்யான வழக்கில் கடையம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்களும் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப் பட்டிருப்பதும் சுரண்டையில் இருந்து கடையம் வந்த தனியார் பேருந்தில் திருடுவதற்காகவே பயணம் செய்ததும் விசாரணையில் அம்பலமாகி யுள்ளது.இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.