May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

சிவகிரி வனப்பகுதியில் பன்றி வேட்டை; 3 பேர் கைது

1 min read

Boar hunting in Sivagiri forest; 3 people arrested

26/4/2024-
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து காட்டு பன்றியை வேட்டையாடிய மூன்று பேர்களை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு 1,50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட கரிவலம் வந்த நல்லூர் பெரிய கால்வாய் பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக நெல்லை மாவட்ட வனஅலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த ரகசிய தகவலின்படி, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில், சிவகிரி தெற்குப்பிரிவு வனவர் சந்தோஷ்குமார், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் அசோக்குமார், வனக் காப் பாளர்கள் முகமது அலி, சன்னாசி, வனக்காவலர்கள் ஆனந்தன், மாரியப்பன், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், குரு ஆகியோர் அடங்கிய தனிக்குழு சிவகிரி வனச்சரக எல்கைக்குட்பட்ட கரிவலம் வந்தநல்லூர் பகுதியில் வனத்துறையின தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் .

அப்போது ஒப்பனையாள்புரம் கிராமத்திற்கு அருகில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு அருகில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய சிவகிரி தாலுகா சங்குபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மாடன் மகன் கடற்கரை (வயது 60), சங்கரன்கோவில் தாலுகா ஒப்பனையாள்புரம் நடுத்தெருவைச் சேர்ந்த வீரன் மகன் பால்துரை (வயது 37), கடையநல்லூர் தாலுகா புளியங்குடி இந்திராநகரைச் சேர்ந்த சின்ன இசக்கி மகன் பெரியமுருகன் (வயது 48) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் நாட்டு வெடிகுண்டுவைத்துகாட்டுப் பன்றியை வேட்டையாடிய குற்றம் மற்றும் மான் கொம்புகள் வைத்திருந்த குற்றம் உறுதிசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுஇவர்கள் மூன்று நபர்களையும் கைது செய்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுஇவர்களிடமிருந்த மான்கொம்புகளை பறிமுதல் செய்யப்பட்டது.

வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு இதன் விபரம் குறித்துமாவட்டவன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வனஅலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் நபர் 1க்கு ரூ.50,000 வீதம் 3 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வன உயிரினங் களை வேட்டையாடுபவர்கள் குறித்து சிவகிரி வனச்சரக அலுவலகத்திற்கு 04636- 298523 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.