சுரண்டையில் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி
1 min read
Attempted robbery at an ATM center in Sarawadi
1.5.2024
தென்காசி மாவட்டம் சுரண்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சுரண்டை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்தின் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் ஏடிஎம் இயந்திரத்தை
உடைக்க முடியாமல் போகவே ஏமாற்றத்துடன் சென்று விட்டார்.
காலையில் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை பார்த்த வங்கி பணியாளர்கள் உடனடியாக சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி உள்ள கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கைரேகைகளை வைத்து ஏடிஎம் கொள்ளைக்காரனை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.