May 28, 2024

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்ற 3-ம் கட்ட தேர்தல்: 93 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

1 min read

Parliament Phase 3 Elections: Voting tomorrow in 93 constituencies 6.5.2024

பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் (ஏப்.19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இரு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன.

3-வது கட்டமாக, அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா-நகர்ஹவேலி மற்றும் டாமன்-டையூ, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ள நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ்குமார் சந்திரகாந்த் போட்டி யின்றி தேர்வானார். மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஏற்கனவே 14 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா (காந்திநகர்), மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர். இத்தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.