நெல்லையில் சர்வதேச செவிலியர் தினவிழா பேரணி
1 min read
International Nurses Day Rally in Nellai
13.5.2024
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
சர்வதேச செவிலியர்கள் தினவிழாவை முன்னிட்டு
செவிலியர்களின் தியாகத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
சர்வதேச செவிலியர் தினம் உலகளவில் செவிலியர்களின் பங்களிப்புகள் மற்றும் கடின உழைப்பை கௌரவிக்கும் வகையில் மே 12 அன்று கொண்டாடப்படுகிறது. மேலும் இது நவீன நர்சிங் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
உலகளவில் சமூகங்களில் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதிலும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் செவிலியர்கள் வகிக்கும் முக்கிய பங்கை இது நினைவூட்டுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள் நமது செவிலியர்கள். நமது எதிர்காலம். பொருளாதார பாதுகாப்பின் சக்தி நவீன செவிலியத்தை உலகிற்கு தந்த விளக்கேந்திய தேவதை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 204 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செவிலியர்களின் தியாகத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதி பாலன் கொடியசைத்து துவக்கி வைத்த பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முன்னதாக செவிலியர்களை போற்றும் வாழ்த்து பலகையில் முதல்வர் அவர்கள் வாழ்த்துகளை எழுதி கவுரவித்திருந்தார். தொடர்ந்து, செவிலியர்களின் சேவையும் அவருடைய தியாகத்தையும் பெருமை பாராட்டி பேசிய முதல்வர் ரேவதி பாலன் நோய் தொற்றில் இருந்து நோயாளிகளை காக்கும் அதே நேரத்தில் தன் உடல் நலனையும் காத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பயிற்சி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டு செவிலியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கோஷங்களை எழுப்பி பேரணியை நிறைவு செய்தனர்.