June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் மாணவர்கள் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி

1 min read

Individual skill development training for students at Thoranamalai

13.5.2024
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.

நேற்று (ஞாயிறு) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாவூர்சத்திரம் ஜெய்ஹிந்த் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலை பயிற்சி மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடையம் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன் பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வந்திருந்த குழந்தைகள் தங்களது அம்மாக்களுக்கு மாலை அணிவித்து, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். மேலும் பூலாங்குளம் சேவா பாரதி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஜோதி செல்வம் தலைமையில் நடைபெற்றது . இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *