சுரண்டை அருகே போலீசை தாக்க முயன்ற பஞ்சாயத்து உறுப்பினர் கைது
1 min read
Panchayat councilor arrested for trying to attack police near Surandai
13.5.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், இராஜகோபாலப்பேரி பகுதியில் போலீசை தாக்கம் முயன்ற பஞ்சாயத்து உறுப்பினரை போலீசார் கைது செய்தனர்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் சுரண்டை அருகே உள்ள இராஜகோபாலப்பேரி ஊராட்சி பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் கதிரேசன் (வயது 38). இவர் இராஜகோபாலப்பேரி பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அதே ஊரில் உள்ள அவரது மாமியார் குடும்பத்தினரிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து மாமனார் மாயாண்டியும், மாமியார் மாரிச்செல்வியும் அடுத்தடுத்து வீரகேரளம்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.
வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் கதிரேசனின் மாமனார் அவசர எண் 100-க்கு அழைத்து புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வீரகேரளம்புதூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் வினித், சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த கதிரேசன் தனது மாமனார் மாயாண்டியை தாக்க முயன்றுள்ளார். அதனைத் தடுத்த போலீஸ்காரர் வினித்தையும் தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து வினித் அளித்த புகாரின் பேரில் வீரகேரளம் புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கௌசல்யா வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்தார்.