கேரள லாட்டரியில் ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை வீரருக்கு ரூ.12 கோடி
1 min read12 crores for a retired Central Reserve Army soldier in the Kerala lottery
31.5.2024
கேரளாவில் வாரம் 7 நாட்களும் நடைபெறும் லாட்டரி குலுக்கல் தவிர ஓணம், கிறிஸ்துமஸ், விஷு உட்பட விசேஷ நாட்களை முன்னிட்டு சிறப்பு பம்பர் லாட்டரிகள் நடைமுறையில் உள்ளது. இதில் ஒணம் சிறப்பு பம்பர் லாட்டரியில் மட்டும் முதல் பரிசாக ரூ.25 கோடி கேரள அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், விஷு பம்பர் குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆலப்புழையை சேர்ந்த விஸ்வாம்பரன் (76) என்பவருக்கு ரூ.12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. இவர் ஒய்வு பெற்ற மத்திய ரிசர்வ் படை வீரர் ஆவார். கடந்த 3 தினங்களுக்கு முன், லாட்டரி சில்லறை விற்பனை நடத்தி வரும் ஜெயா என்பவரது கடையில் வாங்கிய டிக்கெட்டுக்கு முதல் பரிசான ரூ. 12 கோடி கிடைத்து இருக்கிறது.
பரிசு கிடைத்தது குறித்து விஸ்வாம்பரன் கூறுகையில், எனக்கு அடிக்கடி லாட்டரி டிக்கெட் எடுக்கும் பழக்கம் இருந்தது. இதற்கு முன்பாக ரூ. 5 ஆயிரம் வரை பரிசாக கிடைத்து உள்ளது. இவ்வளது பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இந்த பணத்தை வைத்து முதலில் ஒரு நல்ல வீட்டை கட்டுவேன். உதவி என்று யாராவது வந்தால் முடிந்த வரை உதவி செய்வேன் என்று தெரிவித்தார்.