June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டனர் – அண்ணாமலை பேட்டி

1 min read

People have rejected ADMK – Annamalai interview

6.5.2024
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2019-ல் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்?
எஸ்.பி.வேலுமணி கூறியதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. பா.ஜ.க. பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார். அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம். வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது.

தி.மு.க.வினர் ஆட்டை கொடூரமாக வெட்டி அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். தி.மு.க.வினருக்கு என் மீது கோபம் இருந்தால் ஆட்டை வெட்ட வேண்டாம் என் மீது கை வைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *