நீட் மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
1 min read
No ban on conducting NEET medical counselling: Supreme Court notice
11.5.2024
நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாகவும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.நீட் கவுன்சிலிங் நடத்த எந்த தடையும் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.