தி.மு.க. மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கம்
1 min read
DMK Minister Senji Mastan has been removed from the post of district secretary
11.5.2024
விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளளது. தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக ப.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம் சிகாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.