தென்காசி அருகே லாரி மோதியதில் பஸ்சில் பயணம் செய்த தாய் மகன் உட்பட 3 பேர் பலி
1 min read
Three people, including a mother and son, who were traveling in a bus were killed when a truck hit them near Tenkasi
13.5.2024
தென்காசி அருகே டிப்பர் லாரி மோதி தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த 4வயது சிறுவன் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இன்று பிற்பகல் தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை வாசுதேவநல்லூர் அருகேயுள்ள ஏமன்பட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் வின்னேஷ் (வயது 27) ஒட்டிச் சென்றார். பஸ் சுமார் 2 மணி அளவில் தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர் விலக்கு ரவுண்டாணா பகுதியில் சென்ற போது கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றிச் செல்ல செங்கோட்டை சாலையில் இருந்து வந்த டிப்பர் லாரி திடீரென தனியார் பஸ் மீது மோதியது. இதில்; தனியார் பஸ் சாலையில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் உடனடியாக ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த நிலையில் கிடந்த பஸ்ஸை நிமிர்த்தி பஸ்ஸில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கினர்.
இந்த விபத்தில் சிவராமபேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த மாரிதுரை மனைவி அழகு சுந்தரி (35), சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 5வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த அழகுசுந்தரி தனது 4வயது மகன் அட்சய பாலாவை கைளால் அணைத்துக் கொண்டு இருந்ததை காண முடிந்தது. அச்சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அச்சிறுவனையும், மற்றொரு குழந்தையையும் தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி தனது வாகனத்தில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அட்சய பாலா பரிதாபமாக இறந்தான்.
மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் விக்னேஷ், பயணிகள் குமந்தாபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் ஐயப்பன் (57), சிவராமபேட்டை சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த மாரிதுரை மனைவி இந்துஜா (24), சிவராமபேட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்த கணேசன் மனைவி சீதாலட்சுமி (50), ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகரைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி தனலட்சுமி (57), ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரை நகரைச் சேர்ந்த முருகன் மனைவி கார்;த்திகா (23), மேலசொக்கம்பட்டியைச் சேர்ந்த பரமுசாமி மனைவி சிவன்தாய் (55), கொட்டாகுளம் ஆர்.சி.காலனியைச் சேர்ந்த முருகன் மனைவி ஜெயமுருகேஸ்வரி (45), காயல்பட்டணம் சித்தன் தெருவைச சேர்ந்த மீரான் மனைவி ரமி~h (55), கடையநல்லூர் அமீனாள் அம்மா தெருவைச் சேர்ந்த சர்புதீன் மனைவி பாத்திமா (38), இடைகால் சங்குபுரம் சத்துணவு கூட தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி பேச்சியம்மாள் (37), தென்காசி வேம்படி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த உசேன் மகன் இஸ்மாயில் (30), குமந்தாபுரத்தைச் சேர்ந்த அய்யப்பசாமி மகன் பரத் இல்லியாஸ் (3), கேரளாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி விலாசினியம்மாள் (60) ஆகிய 15 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் 108 ஆம்புலன்;ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும். கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இலத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜெ.சி.பி.இயந்திரம் உதவியால் கவிழ்ந்த தனியார் பஸ் மீட்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.