தென்காசியில் கண்களை கட்டி கொண்டு 9 வயது சிறுவன் ஸ்கேட்டிங் சாதனை
1 min readBlindfolded 9-year-old boy sets skating record in Tenkasi
1.7.2024
தென்காசி ஆய்க்குடி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்து புதிய உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எழில் நகர் பகுதியை ரெங்கநாதன் – காயத்ரி தம்பதியரின் மகனான ஸ்ரீ முகுந்தன் ஆய்க்குடியில் உள்ள ஏ எஸ் ஏ வித்யாலயாவில் 4ம் வகுப்பு படித்து வரும் நிலையில்
ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் 9 வயது ஸ்ரீ முகுந்தன் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதனையை மேற்கொள்ளும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு தொடர்ச்சியாக 5 கிலோமீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் கடந்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் டாக்டர் எம்.புதிய பாஸ்கர், அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பு.கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏ.எஸ்.ஏ. வித்யா நிகேதன் பள்ளியின் நிர்வாக அதிகாரி சுதா அனைவருக்கும் வரவேற்று பேசினார்.
தென்காசி போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் எஸ்.எம்.மணி, அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் மு.அரிகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இலத்தூர் காவல் உதவி ஆய்வாளர்கள் சேகனா, தாமரைலிங்கம், சுவாமி. விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவன சுரேஷ்குமார், யோகா மற்றும் ஸ்கேட்டிங் குங்ப்பூ பயிற்சியாளர் ராம்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறுவன்ஸ்ரீ முகுந்தன் கண் களை கட்டிக்கொண்டு இடைவிடாது ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் பயணித்து உலக சாதனை முயற்சியை மேற் கொண்டார்.முடிவில் சுவாமி
விவேகானந்தா யோகா மற்றும்
ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் பாக்கியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.