ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்
1 min readFree eye treatment camp at Subhrajmarka
1.7.2024
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஈக்விடாஸ், அப்பல்லோ பார்மசி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ குலசேகர ராமானுஜ அன்னதான கூடத்தில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமிற்கு ஆழ்வார் குறிச்சி ஸ்ரீ குலசேகர ஆழ்வார் இராமானுஜர் கூடத்தின் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் கணபதி சுந்தரம் என்ற மணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த முகாமிற்கு ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ குலசேகர ஆழ்வார் இராமானுஜர் கூடத்தின் நிர்வாகி வி.மைதிலி முன்னிலை வகித்தார். இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை முகாம் மேலாளர்கள் டாக்டர்கள் யாசிகா, ஆ.சை. மாணிக்கம் , விழி, ஒளி
ஆய்வாளர் சிஞ்சு, உதவி விழி,ஒளி ஆய்வாளர்கள் ரிஸ்வான் , மற்றும் பொதுமக்கள் ஸ்மிருதி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை அளித்தனர் இந்த முகாமில் 1 32 பேர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாணிக்கம் சிறப்பாக செய்திருந்தார்.டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆழ்வார் குறிச்சி ஸ்ரீ குலசேகர ஆழ்வார் இராமானுஜர் கூடம் சார்பில்
ஜி. ராஜலெட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.