June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

வெய்க்காலிப்பட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

1 min read

Kumbabhishekam was held at Veikalipatti temple

8.7.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள வெய்க்கால்பட்டி கிராமத்தில் புண்ணாக்கரையர் வகையறா குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட பெரிய ராமசாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று (குரோதி வருடம் ஆனி மாதம் 24 ஆம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக பூஜைகள் ராமர் அனுமான் ஆலிபூதத்தார் குத்தால மாடன் சுடலை மாடன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின் அனைத்து தெய்வங்களுக்கும் சேர்த்து ஜீரணோதரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பெரிய ராமசாமி கோவிலில் 21 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை புண்ணாக்கரையர் வகையறா குடும்பத்தினர் மற்றும் ஊர் நாட்டாமை சங்கரவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *