June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரள கனிமவள வாகனங்களால் தொடர் விபத்துகள்- ரவி அருணன் புகார்

1 min read

Serial accidents by Kerala Minerals vehicles- Ravi Arunan complains

10.7.2024
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் உயிர் பலிகள் நடைபெற்றுவருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும்
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே.ரவிஅருணன் புகார் தெரிவித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து அதனால் உயிர் பலி ஏற்பட்டு வருவது கவலை அளிக்கிறது.

இந்த கனிமவள வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுனர்கள் மது போதையில் தான் வாகனத்தை இயக்குகிறார்கள். மேலும் மது அல்லாத ஒரு சில போதை பொருட்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதாக தெரிகிறது.

காவல்துறையினர் சரியான முறையில் சோதனை நடத்தி இதை முற்றிலும் நிறுத்துவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும்.

இந்த வாகனங்களை இயக்குபவர்கள் இரண்டு காதுகளிலும் இயர் போனை மாட்டிக் கொண்டு தான் வாகனத்தை இயக்குகிறார்கள் அப்படி இயர்போன் மாட்டிக் கொண்டு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இரவு பகலாக கல் குவாரிகள் இயங்குவதால் போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை இயக்குகிறார்கள் இதனால் சரியான நேரத்திற்கு வாகன ஓட்டுனர்களால் தூங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓட்டுநர்களின் தூக்க கலக்கத்தில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழப்பதினால் பல விபத்துக்கள் நடக்கிறது.

சாலையில் பயணிக்க கூடிய பொதுமக்கள் இந்த கனிமவள கனரக வாகனங்களை பார்த்தாலே பயந்து நடுங்குகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு மீறி ஏற்றிச்செல்லும் கனிம வளங்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஆங்காங்கே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வாகனங்களால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு செங்கோட்டை தென்காசி குடிநீர் திட்டத்தில் ஏறக்குறைய 50 இடங்களில் உடைத்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக சொல்கிறது . மேலும் அந்தத் தண்ணீரை பொதுமக்கள் குடிப்பதினால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது .பொது மக்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதை பலமுறை வற்புறுத்தியும் இன்னும் உடைப்புகள் அடைக்கப்படவில்லை

ஆகவே மேற்கூறிய கருத்துக்களை ஆய்வு செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *