June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

புதுக்கோட்டையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

1 min read

A raider shot dead in an encounter in Pudukottai

11/7/2024
திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை என்பவர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் ரவுடி துரை பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர்.
ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிடிக்க முயன்றபோது போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் இந்த ரவுடி துரை?

ரவுடி துரை என்கிற ( துரைசாமி) மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 70 வழக்குகள் உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *