June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

ஓடைமறிச்சான் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம்-ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Manu Nidhinal Camp-Administrator Participation in Odaimarichan village

11.8.2024
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்,
ஓடைமறிச்சான் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.5.83 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஓடைமறிச்சான், உடையாம்புளி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதிநாள் முகாம் ஓடைமறிச்சான் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.கமல்கிஷோர் தலைமை தாங்கினார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் எம்.திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு பட்டா உத்தரவு நகல், 33 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா
3 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டாக்களுக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு பட்டா நகல் என ரூ.2.69 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தனி வட்டாட்சியர்(சமூக பாதுகாப்புத்திட்டம்) மூலம் 1 பயனாளிக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், 2 பயனாளிளுக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக பெயர் சேர்த்ததற்கான அட்டையினையும், குடிமைப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு குடும்ப நகல் அட்டையும் வழங்கப்பட்டது

மேலும் தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.27,395 மதிப்பிலான மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங் களையும், வேளாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.1265 மதிப்பிலான உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பயிறு நுண்ணுடக்கலவையினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.30,880 மதிப்பிலான தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் மூலம் கத்தரி நாற்றுகள், எலுமிச்சை நாற்றுகள், தென்னை பரப்பு விரிவாக்கம் செய்தலையும், சமூக நலத்துறை மூலம் முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு வைப்புத்தொகைக்கான ரூ2.50 இலட்சத்திற்கான ஆணையினையும் என மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ. 5 இலட்சத்து 83 ஆயிரத்து 604 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் மற்றும் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த முகாமில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் (பொ) இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் முருகானந்தம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தஷேக் அயூப், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மதிவதனா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா, ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் மீனாசந்தானம், ஊராட்சிமன்ற தலைவர் பொன்ராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *