தென்காசியில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது
1 min read
Naam Tamilar Party leader Sattai Duraimurugan arrested in Tenkasi
11.7.2024
தென்காசியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன் இவர் சாட்டை என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போது முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியுள்ளார் .
இது பற்றி திமுக நிர்வாகி ஒருவர் திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் குற்றாலம் வந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றாலம் வந்த திருச்சி போலீசார் குற்றாலத்தில் பல்வேறு விடுதிகளிலும் தீவிரமாக தேடியுள்ளனர்.
இந்நிலையில் தென்காசியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகிலுள்ள தனியார் விடுதியில் சாட்டை துரைமுருகன் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி போலீசார் அங்கு சென்று சாட்டை துறை முருகனை கைது செய்து அவரை திருச்சிக்கு அழைத்து செல்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.