சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம்
1 min read
Aadithabasu festival flag hoisting at Shankaran temple
11.7.2024
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியே ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 5:00 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகள் நடைபெற்றது.
இந்த கொடி ஏற்ற நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன். தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் பழனிச் செல்வம், திமுக தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காசிராஜன்,நகரச் செயலாளர் பிரகாஷ் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, டாக்டர் சுப்பாராஜ், மதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் தி.மு. ராஜேந்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், திவ்யா ஸ்வீட்ஸ் உரிமையாளர் ரெங்கன், நகை கடை உரிமையாளர்கள் சங்கரசுப்பு, சங்கர சுப்பிரமணியன், சங்கரன், சுந்தர், கண்ணன், குமரன், அருணாச்சல் ஆட்டோ கனகவேல், அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கே.எஸ்.எஸ் மாரியப்பன், மேலநீலிதநல்லூர் ஒன்றிய அதிமுக பிரமுகர் எஜமான் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.