June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

பி.சுசீலா பூரண நலமுடன் வீடு திரும்பினார்

1 min read

B. Sushila returned home in perfect health

19.8.2024
சென்னை காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இசையரசி பி.சுசீலா , சிகிச்சைக்கு பின் இப்போது நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து பி.சுசீலா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
காவேரி மருத்துவமனையில் மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடானுகோடி அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் பி.சுசீலா தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *