June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க 23-வது பொதுக்குழு கூட்டம்

1 min read

Alwarkurichi College Alumni Association 23rd General Committee Meeting

20.8.2023
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க 23ஆவது பொதுக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி சுயநிதிப்பிரிவு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.வி. பெருமாள் தலைமை வகித்தார். மாணவிகள் கே.ஸ்ருதி கோமதி, ஆர்.சௌர்ந்தர்யா கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வணிகவியல் இரண்டாமாண்டு மாணவி எஸ்.செளமியா வரவேற்பு பரதநாட்டியம் ஆடினார். துணைத் தலைவர் ஆர்.எஸ்.சிவராமன் வரவேற்றார். செயலர் முகைதீன் பிச்சை ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கே.சிவசங்கர் நிதி அறிக்கை வாசித்தார். கல்லூரிச் செயலர் ஜி.தேவராஜன், முதல்வர் எஸ். மீனாட்சி சுந்தர், மாணவர் சங்க முன்னாள் தலைவர் வி.டி.ராஜன், பெங்களூரு மண்டல செயலர் வி.ராமசுப்பிரமணியன், எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தலைவர் எஸ்.வி. பெருமாள் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.தங்கம் சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார்.

தமிழக நில வரன்முறை குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் மாணவர் எல். சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கல்லூரியில் பயின்று 50 ஆண்கடுள் நிறைவடைந்த முன்னாள் மாணவர்கள், கல்லூரியில் பயின்று அரசு மற்றும் வங்கிகளில் பணியில் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தேசிய மாணவர்படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டங்களில் சாதனைப் படைத்த மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை வணிகவியல் மூன்றாமாண்டு மாணவிகள் எஸ்.அனிகா, கே. ஃபாசியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். துணைப் பொதுச் செயலர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சுந்தரம், முன்னாள் பேராசிரியர்கள் வி.மகாதேவன், அ. பழனிவேல், முன்னாள் மாணவர்கள் ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன், மருத்துவர்கள் முருகையா, மூர்த்தி, குஜராத் உமா ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை, மதுரை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாளர் கே.சிவசங்கர், அலுவலகச் செயலர் எஸ்.சதீஷ் நாராயணன் மற்றும் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *