June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் மாரத்தான் போட்டி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

1 min read

District Collector inaugurated marathon competition in Courtalam

20.8.2024
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால சாரல் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான மாரத்தான் போட்டி சுமார் 7 கி.மீ தொலைவிலும், தொலைவிலும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி சுமார் 5 கி.மீ தொலைவிலும் நடைபெற்றது. இம்மாரத்தா போட்டியினை தென்காசி, மேலகரத்திலிருந்து இன்று (19.08.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.

மாரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டத்தை சார்ந்த ஆண்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் நெற்கட்டும் செவலினை சார்ந்த. கண்ணன் முதலிடமும், திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த அஜித குமார இரண்டாமிடமும், தென்காசியை சார்ந்த பசுபதி மூன்றாமிடமும், திருநெல்வேலியைச் சார்ந்த ஆனந்த நான்காமிடமும், திருநெல்வேலியைச் சார்ந்த நிஷாந்த் ஐந்தாம் இடமும், திருநெல்வேலியைச் சார்ந்த யஷ்வந்த் ராஜ் ஆறாமிடமும் திருநெல்வேலியைச் சார்ந்த பாலசுப்பிரமணியன் ஏழாம் இடமும், திருநெல்வேலியைச் சார்ந்த ஸ்ரீனிவாசன் எட்டாமிடமும், மும், தென்காசியச் சார்ந்த திரு.சிவ பாஸ்கர் ஒன்பதாம் இடமும், தென்காசியைச் சார்ந்த துரை பாண்டியன் பத்தாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் திப்பணம் பட்டியை சார்ந்த செல்வி. அபிநயா முதலிடமும், பாவூர்சத்திரத்தினை சார்ந்த செல்வி, ஸ்வேதா இரண்டாமிடமும், பாவூர்சத்திரத்தினை சார்ந்த செல்வி, செல்வலெட்சுமி மூன்றாமிடமும், தென்காசியைச் சார்ந்த செல்வி. கிருஷ்ண வேணி நான்காமிடமும், சாம்பவர் வடகரையைச் சார்ந்த செல்வி. வைத்தீஸ்வரி ஐந்தாமிடமும், கம்பளியை சார்ந்த செல்வி கல்பனா ஆறாம் இடமும், செல்வி, மரிய தெரசா பாவூர் சத்திரத்திரத்தை சார்ந்த செல்வி. கல்பனா ஏழாமிடமும், கடையத்தைச் சார்ந்த செல்வி, உமா கைலா எட்டாமிடமும், கடையத்தைச் சார்ந்த செல்வி. இந்திரா ஒன்பதாம் இடமும், சாம்பவர் வடகரையைச் சார்ந்த செல்வி. பொன் ஜெய லெட்சுமி பத்தாம இடமும் பெற்று வெற்றி வாகையை சூடியுள்ளார்கள்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.7000 மும், மூன்றாம் பரிசாக 5.5000/- 4 ஆம் இடம் முதல் 6 ஆம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ஒவ்வொருவொருக்கும் ரூ 3000/- மும் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமசந்திரன வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்
கிஷோர, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் சதன் திருமலைக் குமார் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *