August 12, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடி: தமிழகத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி

1 min read

GST collection Rs 1.75 lakh crore in August: Rs 10 thousand crore from Tamil Nadu

2.9.2024
ஆகஸ்டு மாதம் ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஆகஸ்டு மாதம் வசூலான ரூ.1.75 லட்சம் கோடி ஜிஎஸ்டியில், சிஜிஎஸ்டி ரூ.30,900 கோடி.
எஸ்ஜிஎஸ்டி ரூ.38,400 கோடி.
ஐஜிஎஸ்டி ரூ.93,600 கோடி.
செஸ் வரி ரூ.12,100 கோடி வசூல் ஆகி உள்ளது.
2023ம் ஆண்டு ஆகஸ்டு, மாதம் ரூ.1.59 லட்சம் கோடி வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக வசூல் ஆகி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 10,181 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். அப்போது 9,475 கோடி ரூபாய் வசூல் ஆனது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *