August 14, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மருத்துவக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

1 min read

Global Suicide Prevention Awareness Rally at Nellai Medical College

11.9.2024
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவு சார்பாக உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக தற்கொலை தடுப்பு தினம் உலகம் முழுவதும் ஒவ்வொ௫ வ௫டமும் செப்டம்பர் 10ம் தேதி நடத்தப்படுகிறது. இதையொட்டி, தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கம், உலக மன நல கூட்டமைப்பு இவற்றுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியில் தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டங்களையும், தற்கொலை தடுப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறது.

அதன்படி திருநெல்வேலி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனநலப் பிரிவு சார்பாக சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர். ரேவதிபாலன் தலைமையேற்று தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்ரமணியம், உதவி முதல்வர் டாக்டர். சுரேஷ் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனநலப் பிரிவு துறைத்தலைவர் டாக்டர். ரமேஷ் பூபதி வரவேற்புரை ஆற்றினார்.

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட அரசு செவிலியர் பயிற்சி மாணவிகள், ராஜாஸ் செவிலியர் கல்லூரி, இதயஜோதி, அல்மையிட்டி செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவ மாணவிகள், மனநலப்பிரிவு முதுகலை, இளநிலை மருத்துவ பயிற்சி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் தற்கொலை தடுப்பு குறித்த பதாதைகளை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை கூறியும் சென்றனர். தற்கொலை தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,

திருநெல்வேலி அரசு மருத்துவ க் கல்லூரி முதல்வர் பேசிதாவது:-

இந்த வருடத்தின் கருப்பொருள்: தற்கொலை பற்றிய கதைகளை மாற்ற – அதைப் பற்றி பேச துவங்குவோம் என்பதாகும். அதாவது, தற்கொலை எண்ணம் தோன்றும் சக மனிதனின் எண்ணத்தை மாற்றி வாழ வைக்கும் முயற்சியை எடுக்க வேண்டும். மேலும், மனம் என்கிற நல்லாதரவு மன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தன்னம்பிக்கையை வளர்த்தால், தற்கொலையை தவிர்க்கலாம். தற்கொலை இல்லாத
புதிய பாரதம் படைப்போம் என்றார்.

அதனைத் தொடர்ந்து மனநலப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ரமேஷ் பூபதி பேசும் போது,
மனிதர்களில் சிலர் பிரச்சனையில் இருந்து ஓட ஒரு வழியாக தற்கொலையை தேர்தெடுக் கின்றனர் பலர் . மேலும் குடும்ப சூழல், கல்லூரி சூழல், மொழி பிரச்சனை, பாடங்கள் புரியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனஅழுத்தமானது நமது மூளையில் ஏற்படும் இரசாயன ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் ஒரு அபாய விளைவாகும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நமது பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவதினால் தற்கொலையை நிச்சயமாக தடுக்க முடியும். இந்நிலையில், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை 14416 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடா்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற முடியும்.என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பொதுநலப் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் ரபி, புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவுத்துறை தலைவர் டாக்டர் ஆறுமுகம், பாலு மற்றும் மனநலப் பிரிவு மருத்துவர்கள் புவனேஷ்வரன், காட்சன், சீனிவாசன், கந்தசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மனநலப் பிரிவு இணைபேராசிரியர் டாக்டர். இராமானுஜம் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியை செவிலியர் பயிற்றுநர் செல்வன் தொகுத்து வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *