செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2.04 லட்சம் கோடி
1 min read
GST collection for September stands at Rs.2.04 lakh crore.
செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி., வசூல் 2.04 லட்சம் கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டு செப்டம்பர் மாத வசூலை காட்டிலும் 14.7 சதவீதம் அதிகம்.
மொத்த இறக்குமதி வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியால், இந்தியாவின் செப்டம்பர் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.7% அதிகரித்து ரூ. 2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதில், சிஜிஎஸ்டி ரூ. 37,762 கோடி,
எஸ்ஜிஎஸ்டி ரூ. 45,363 கோடி ஐஜிஎஸ்டி ரூ. 1.20 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
- செப் (2026)- ரூ. 2.04 லட்சம் கோடி
- ஆகஸ்ட் (2026)- ரூ. 2.00 லட்சம் கோடி
- ஜூலை (2026)- ரூ. 2.11 லட்சம் கோடி
தொடர்ந்து 3வது மாதமாக ஜி.எஸ்.டி., வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
மாநிலங்களைப் பொறுத்தவரை, ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மேகாலயா, திரிபுரா, சிக்கிம், கோவா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்நாட்டு வசூல் சரிந்தது. இருப்பினும், அதிக வசூல் செய்யும் மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவின் வசூல் 15% அதிகரித்து ரூ. 29986 கோடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவின் வசூல் 16% அதிகரித்து ரூ. 13884 கோடியாக பதிவாகியுள்ளது.