தென்காசி மாவட்டத்தில் 14 எஸ்ஐக்கள் இடமாற்றம்
1 min readTransfer of 14 SIs in Tenkasi district
13.9.2024
தென் காசி மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சப் இன்ஸ் பெக்டர் முருகேஸ்வரி கடையநல்லூரில் இருந்து தென்காசிக்கும், கார்த்திக் ஆய்க்குடியிலிருந்து ஆலங் குளத்திற்கும், கிருஷ்ணன் அய்யாபுரத்திலிருந்து சங்க ரன்கோவில் நகரத்திற்கும், ஜெயராஜ் சேர்ந்தமரத்தி லிருந்து கரிவலம்வந்தநல் லூருக்கும், அந்தோணி ஜெயராஜ் அய்யாபுரத்தி லிருந்து குருவிகுளத்திற்கும், கணபதிசெல்வம் சின்ன கோவிலான்குளத்திலிருந்து சங்கரன்கோவில் தாலுகா விற்கும், சுரேஷ் கண்ணன் சங்கரன்கோவில் நகரத்தி லிருந்து சின்ன கோவிலான் குளத்திற்கும், சண்முக வேல் வாசுதேவநல்லூரில் இருந்து புளியங்குடிக்கும். சுப்பையா பனவடலிசத் திரத்திலிருந்து கரிவலம் வந்தநல்லூருக்கும், கண் ணன் வாசுதேவநல்லூரில் இருந்து சிவகிரிக்கும், செல்வி தென்காசியில் இருந்து செங்கோட்டைக் கும், இளவரசி செங்கோட் டையிலிருந்து மாவட்ட குற்றப்பிரிவிற்கும் இடமாற் றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை தென்காசி மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் பிறப்பித்துள்ளார்.