June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி பிறந்த நாள்- தென்காசி பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள்

1 min read

Prime Minister Modi’s Birthday- Special Pujas at Tenkasi Big Temple

17.9.2024
தென்காசி மாவட்டம், தென்காசியில் பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் கே.ஏ.ராஜேஷ் ராஜா தலைமையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக பார்வையாளர் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி தென்காசி நகர பாஜக பொதுச்செயலாளர் யோகா சேகர், உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் விவேக் குமார் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தென்காசி பாஜக நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கரசுப்பிர மணியன், லட்சுமண பெருமாள், நகர துணைத் தலைவர் நாராயணன், எல்.ஜி.குத்தாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *