June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் காந்தி, காமராஜர் சிலை வைக்க நாடார் சங்கம் கோரிக்கை

1 min read

Nadar Sangam request to place statue of Gandhi and Kamaraj in Kadayam

2.10.2024
தென்காசி மாவட்ட நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் மகாத்மா காந்தி பிறந்நாள் விழா கடையம் பஸ் நிலையம் அருகில் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் இ.கவிபாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பி.ஜெ.செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் காந்தி மற்றும் காமராஜர் உருவப்படங்களுக்கு மலர்த் தூவி மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பி.சீதாலட்சுமி சிறப்புரையாற்றினார். லாலாக்கடை மோகன், பழக்கடை நாகராஜ், பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சந்திரசேகர் நன்றி கூறினார்.
மகாத்மா காந்திக்கும், காமராஜருக்கும் கடையத்தில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்ட வேண்டும்.‘ கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் பாதை சீரமைக்க வேண்டும். கடையம்-தென்காசி பாதையில் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் பயணிகள் வனவிலங்குகளால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையின் ஓரத்தில் தடுப்பு வேலை அமைக்க வேண்டும். கடையம் முதலியார்பட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *