June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 min read

2 terrorists shot dead in Kashmir

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரின் கனியார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அதேபோல், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் லர்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் இன்று மொத்தம் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, காஷ்மீரின் பெந்திபுரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *