சுரண்டை அருகே அண்ணன் குத்திக்கொலை-தம்பி, அவரது மகனுக்கு போலீஸ் வலை
1 min read
Brother stabbed to death near Surandai- Brother, police net for his son
2/10/2024
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நடை பாதை தகராறில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது மகனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மாடன் என்பவரது மகன் ஆறுமுகச்சாமி ( வயது 54). இவரது சகோதரர் மாரியப்பன் (வயது 50). இவர்கள் இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசித்து வருகின்ற னர். சகோதரர்களுக்கு இடையே நடை பாதை தொடர்பாக அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் சுமார் 7 மணி அளவில் ஆறுமுகச்சாமி, மாரியப்பன் இருவருக்கும் இடையே நடைபாதை தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாரியப்பன், அவரது மகன் மணிகண்டன் (வயது 25) ஆகிய இருவரும் சேர்ந்து ஆறுமுகச் சாமியை கத்தியால் குத்தி யுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகச்சமியை
போலீசார் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல் லும் வழியிலேயே ஆறுமுகச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சுரண்டை இன்ஸ் பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தென்காசி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து தனிப் படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விட சுரண்டை போலீஸ் சாலைகளை வலை வீசி தேடி வருகிறார் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.