கடையத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் உதயம்
1 min read
A sports club was started in Kadayam
2.10.2024
கடையத்தில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் செயல்பட்டன. அதன்மூலம் மாவட்ட அளவில் மாநில அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக அப்போது வாலிபால், கபடி, கால்பந்து அதிகமாக விளையாப்படும். இப்போது ஒன்றிரண்டு விளயைாட்டு குழு இருந்தாலும் அப்போபோல் இல்லை.
இந்த நிலையில் முன்புபோல் விளையாட இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அம்பி என்ற வைத்திலிங்கம் ஆர்வம் கொண்டார். இவர் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
அவருடைய முயற்சியின்பேரில் கடைத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் நேற்று (1.11.2024) தொடங்கப்பட்டது. கடையம் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கடையம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் பி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். கீழக்கடையம் பஞ்சாத்து தலைவர் பூமிநாத், சேர்வைகாரன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், யூனியன் கவுன்சிலர் புளி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை ஜெ.ஜீவா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பஞ்சாயத்து தலைவர்கள் பேசும்போது இந்த கிளப்பின் முன்னேற்றத்திற்கு தங்களால் முடிந்த உதவியை செய்வதாக கூறினார்கள்.
கடையம் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் செயல்பாடுகளை வைத்திலிங்கம் விளக்கினார். அவர் “கடையம் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் கைப்பந்து கால்பந்து இறகு பந்து மற்றும் கபாடி போட்டிகள் நடத்தப்படும். மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அத்தலடிக்ஸ் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்” என்றார்.
ஆடலரசன், ஸ்டீபன், ரவீந்திரன், வைத்திலிங்கம் என்ற பாபு ஆகியோர்கள் தங்களது கருத்துக்களையும் எடுத்துரைத்தார்கள்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
தலைவராக வைத்திலிங்கம். துணைத் தலைவர்களாக ஆடலரசன், ரவீந்திரன், செயலாளராக ஜீவா, இணைச்செயலாளராக குணசேகரன், துணைச் செயலாளர்களாக அற்புதராஜ். பிரபு, பொருளாளராக தாமரைச்செல்வன், செயற்குழு உறுப்பினர்களாக திருபுளி கணேசன், உதயசெல்வன், சாமுவேல்ராஜ், இந்திரஜித், துரைசிங், அலெக்ஸ் ஜேக்கப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆலோசனைக் குழுவினராக டி.கே.பாண்டியன், பூமிநாத், ரவிச்சந்திரன் ஆலோசனை குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தயாள லட்சுமணன், நதின் ஆறுமுகம், வேலு முருகையா, வினோத், முஸ்தபா நூறா லி, ராமசாமி என்ற கண்ணன், முத்தையா, வைத்திலிங்கம் என்ற பாபு ஆகியோர் ஆலோசனை குழுவில் இடம்பெற்றனர். கௌரவ ஆலோசகராக மெரி பால் உள்ளார்.
இந்த கூட்டத்தில் கடையம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் விளையாட்டு திருவிழாவை டிசம்பர் மாதம் 29ஆம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் ஆடவர்களுக்குமான கபடி போட்டி, ஆடவர்களுக்கான இறகு பந்து போட்டி நடைபெறும். ஜனவரி மாதம் 12ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான அத்தலடிக்ஸ் போட்டிகள் நடைபெறும். அதில் 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவமாணவிகள் கலந்து கொள்ளலாம். அத்தலடிக்ஸ் போட்டிகள். 100 மீட்டர் ஓட்டம் 200 மீட்டர் ஓட்டம் 400 மீட்டர் ஓட்டம் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது.