தென்காசியில் அஞ்சலக ஏற்றுமதி மையம்- அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
1 min read
Postal Export Center in Tenkasi – Postal Divisional Superintendent Information
20.11.2024
தென்காசியில் உள்ள தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் 2023ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள தென்காசி தலைமை அஞ்சலகத்தில், வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலக ஏற்றுமதி மையம் 2023ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் ஏற்றுமதியாளர்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றுள்ளது.
அஞ்சலக ஏற்றுமதி மையம் ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. இந்த மையங்கள் ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிபடுத்தவும் உதவுகின்றன.
வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் பார்சல்களின் விபரங்களைத் தாங்களே எளிமையான முறையில் ஆன்லைனில் உள்ளீடு செய்த பின் தென்காசி தலைமை அஞ்சலகம் மூலமாக, ஏற்றுமதி பார்சல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் புக்கிங் குறித்த விவரங்களை ஆன்லைனிலேயே ஃபாரின் போஸ்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் வசதியும் இதில் அடங்கும்.
வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பும் இந்த சேவையை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும்
மேலும் விபரங்களுக்கு வணிக மேலானரை 7904420532 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு கோவில்பட்டி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.