மும்பையில் 3-வது முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு மந்திரியாகும் வாய்ப்பு
1 min read
Tamilselvan, who won for the third time in Mumbai, has a chance to become a minister.
24.11.2024
மராட்டிய மாநிலம் சட்டசபை தேர்தலில், 3வது முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. மராட்டிய மாநிலத்தில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,895 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் 2014, 2019ம் ஆண்டு பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது அவர் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். மூன்றாம் முறை வென்ற தமிழ்ச்செல்வனுக்கு மந்திரியாகும் வாய்ப்பு உள்ளது. தமிழரான, இவர் 3 முறை எம்.எல்.ஏ., ஆனது அங்கு வசிக்கும் தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்செல்வன் மஹா.,வில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.,வானவர்.