இலங்கையில் கனமழைக்கு 4 பேர் பலி
1 min read
4 people killed in heavy rains in Sri Lanka
28.11.2024
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் 2.30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம்.
மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராணுவமும், கடற்படையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.