ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
1 min read
EVKS Elangovan admitted to hospital
28.11.2024
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். முன்னதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.