போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து அரசுப்பணியில் சேர்ந்த 78 பேர் டிஸ்மிஸ்
1 min read
78 people who joined government service by presenting fake disability certificates dismissed
4.12.2024
தென்காசி மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் போலியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 78 பேரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலர் மாற்றுத்திறனாளி என்று போலியாக மருத்துவ சான்றிதழ் கொடுத்து அரசுப்பணியில் சேர்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டார்.
அதன்படி மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் 78 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது..இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு படி நடைபெற்ற மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள புதூர், வடகரை, அச்சன்புதூர், இராயகிரி இலஞ்சி உள்ளிட்ட பேரூராட்சிகள் மட்டுமன்றி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 78 பேர்கள் மாற்றத்திறனாளி இல்லை என்றும் அவர்கள் போலீச் சான்றிதழ் கொடுத்து அரசுப்பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த 78 நபர்களும் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நிக்கம் செய்யப்பட்ட உத்தரவு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் அந்தந்த பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அரசு பணியில் பணியாற்றி ஊதியம் பெற்று வந்த 78 நபர்கள் தற்போது அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.