August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவில்பட்டி சிறுவன் கொலையில் உடனடி நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

1 min read

Immediate action in the murder of the Kovilpatti boy: Edappadi Palaniswami urges

12.12.2024
கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை தேவை என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக செய்திகள் வந்த நிலையில், இன்று அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தா ஆகியோர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சிறுவனின் பெற்றோர் மற்றும் தாத்தாவிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *