June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

தொடர் மழை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

1 min read

Continuous rains: Devotees banned from visiting Chathuragiri

12.12.2024
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி மலை கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக நாளை முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்திருந்தனர். இதனிடையே வங்கக் கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *