தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Tenkasi District Public Grievance Redressal Day Meeting
18.12.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 474 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வாழ்வாதார மேம்பாடு பண்ணை தொகுப்புகள் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில், கீழப்பாவூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், கடையம் வட்டாரங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.66 இலட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
தொடர்ந்து இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா. முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 474 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.