June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம்: மேலும் 2 வழக்குகள் பதிவு

1 min read

Kerala medical waste issue: 2 more cases registered

21.12.2024
நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கேரள மாநில மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி நடுக்கல்லூர் உள்ளிட்ட 4 இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள், ரத்த சாம்பிள்கள், ஆவணங்களை நெல்லை மாவட்ட அதிகாரிகள் சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தனர்.
அதன்படி, நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நேற்று கேரள குழுவினர் வந்து ஆய்வு செய்தனர்.
பின்னர் இதுகுறித்து ஆய்வு செய்த கேரள அதிகாரிகள் கூறுகையில், “இங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை. மருத்துவ பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் மாதிரி பொருட்களே அதிகம் உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து கேரள அரசிடம் முழுமையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து கேரள மருத்துவ அதிகாரிகளிடம் பேசிய நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், “மருத்துவ கழிவுகளை கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுவதன் மெய்த்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கழிவுகள் எந்த பிரச்சினையும் இல்லாதவை என்றால், அவற்றை இடைத்தரகர்களை அமர்த்தி இவ்வளவு தொகை செலவு செய்து இங்கு கொண்டு வந்து கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே. இவை ஆபத்தானதாகவே கருதி இனிவரும் காலங்களில் எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நெல்லை அருகே கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சுத்தமல்லி காவல்நிலையத்தில் பதிந்த 3 வழக்குகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைதான நிலையில், கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *