பாப்கார்ன்களுக்கு வெவ்வேறு ஜி.எஸ்.டி வரி விதிப்பு ஏன்? நிர்மலா சீதாராமன் பதில்
1 min read
Why is there a different GST rate for popcorn? Nirmala Sitharaman’s response
22.12.2024
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலின் 55வது கூட்டம் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்றும், பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு தற்போது அமலில் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்றாலும், ஒவ்வொரு பொருளிலும், இவ்வாறு வேறு வேறாக வகை பிரித்து ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.